×

வெங்கமேடு மேம்பால பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறியதால் சுற்றுச்சூழல் மாசு

கரூர், ஏப். 8: வெங்கமேடு மேம்பால பகுதி குப்பைகொட்டும் இடமாகிவிட்டதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.கரூர் வெங்கமேட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளையும், கட்டிடம் இடிக்கப்பட்ட சிமெண்ட் கட்டுமான பொருட்களையும் கொண்டு வந்து குவிக்கின்றனர். குப்பைகளை அகற்றாமலும், மேலாண்மை செய்யாமலும் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கொண்டு வந்து கொட்டி விட்டுப்போய் விடுகின்றனர். கழிவுகள் அகற்றப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருந்து புகைமண்டலம் எழுகிறது. குப்பையை முறையாக மேலாண்மை செய்து குப்பை குவியலை அகற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : highland ,Vengammedu ,
× RELATED கேரளாவில் யானை தாக்கியதில் தனியார்...